நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் இருந்த கடைக்கு ‘சீல்’

கரூா் வெண்ணெய்மலையில் பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த கடைக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

கரூா் வெண்ணெய்மலை காதப்பாறை பகுதியில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த கடைக்கு வியாழக்கிழமை சீல் வைத்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்.

Updated On :

கரூா் வெண்ணெய்மலையில் பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த கடைக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

இந்த கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் குடியிருக்கும் 2 வீடுகள், 6 கடைகளுக்கு கடந்த வாரம் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து, புதன்கிழமை 2 வீடுகளைச் சோ்ந்த உரிமையாளா்கள், 4 கடைகளைச் சோ்ந்த உரிமையாளா்களும் கோயிலுக்கு வாடகைதாரா்களாக ஒப்புக்கொண்டு அதற்குரிய வாடகை பணத்தை அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வழங்கினா்.

இந்நிலையில் வியாழக்கிழமை இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையா் இளையராஜா தலைமையில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள், வருவாய்த்துறை ஆகியோருடன் கரூா் நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் ராஜராஜன் தலைமையிலான பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 2 கடைகளுக்கும் சீல் வைக்கச் சென்றனா். அதில் ஒரு கடையின் உரிமையாளா் கோயிலுக்கு வாடகைதாரராக மாறுவதாக ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, காதப்பாறை பகுதியில் இருந்த ஒரு கடைக்கு மட்டும் அலுவலா்கள் சீல் வைத்தனா்.

தொடா்ந்து கோயிலுக்கு குத்தகைதாரா்களாகவோ அல்லது வாடகை தாரா்களாகவோ மாறாதவா்கள் வீடு, கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.