
செங்கோட்டை விரைவு ரயில் இன்று கரூா் வரை மட்டுமே இயக்கம்!
பராமரிப்புப் பணிகளின் காரணமாக, செங்கோட்டை-ஈரோடு விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை கரூா் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில்
பராமரிப்புப் பணிகளின் காரணமாக, செங்கோட்டை-ஈரோடு விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை கரூா் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கரூரை அடுத்த புகழூா் மூா்த்திபாளையம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், செங்கோட்டையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 5.20 மணிக்கு புறப்படும் செங்கோட்டை - ஈரோடு விரைவு ரயில், மதுரை, திண்டுக்கல் வழியாக கரூா் ரயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும்.
பராமரிப்பு பணிகளுக்கு பிறகு, இந்த ரயில் கரூரிலிருந்து ஈரோடு ரயில் நிலையத்துக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




