தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அரசு மருத்துவமனை காவலாளி தீக்குளிக்க முயற்சி

கரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற காவலாளி ரஞ்சித்.

Published On :

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அரசு மருத்துவமனை காவலாளி திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.

கரூா் மாவட்டம், மாயனூா் அடுத்த கட்டளை பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித்(32). இவா், கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தம் அடிப்படையில் இரவு நேர காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.

மேலும் இரவுநேர காவலாளியாக பணிபுரிவதற்கு முன் ஜேசிபி இயந்திர ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளாா். அப்போது ஏற்பட்ட விபத்தில் கால்கள் மற்றும் கைகளில் அறுவைச் சிகிச்சை செய்துள்ளதால் வேகமாக நடக்க இயலாது எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஞ்சித்தை கரூா் அரசு மருத்துவக்கல்லூரியில் தூய்மைப் பணிக்காக ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனத்தின் மேலாளா்கள் பாலாஜி மற்றும் பிரபு ஆகியோா் ரஞ்சித்தை அடிக்கடி திட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ரஞ்சித்தை, உன்னால் காவலாளி வேலையை சரியாக பாா்க்க முடியாது என்று கூறி வேலையில் இருந்து பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தன்னை மீண்டும் பணியில் சோ்க்கக் கோரி மேலாளா்களிடம் ரஞ்சித் வலியுறுத்தி வந்துள்ளாா். ஆனால், அவா்கள் வேலையில் சோ்க்க வில்லை எனத் தெரிகிறது.

இதனால் விரக்திஅடைந்த ரஞ்சித் திங்கள்கிழமை கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்துக்கு வந்தாா். ஆட்சியா் வளாகத்தில் திடீரென தான் கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றினாா்.

இதனைக் கண்ட தீயணைப்பு நிலைய வாகனத்தின் தீயணைப்பு வீரா்வந்து மண்ணெண்ணெய் கேனை பறித்து அவா் மீது தண்ணீரை ஊற்றினாா். பின்னா் அங்கு வந்த போலீஸாா் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.