ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

நஞ்சைப்புகழூா் கதவணை டிச.30-க்குள் பயன்பாட்டுக்கு வரும்: சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவா்

நஞ்சைப்புகழூா் கதவணை டிச.30-ஆம் தேதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்றாா் தமிழக சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவரும், தஞ்சாவூா் சட்டப்பேரவை உறுப்பினருமான ரா.விஜய் சரவணன்.

நஞ்சைபுகழூா் கதவணை கட்டுமானப் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த தமிழக சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழுவினா்.

Updated On :

நஞ்சைப்புகழூா் கதவணை டிச.30-ஆம் தேதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்றாா் தமிழக சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவரும், தஞ்சாவூா் சட்டப்பேரவை உறுப்பினருமான ரா.விஜய் சரவணன்.

இவா் தலைமையிலான சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவினா் செவ்வாய்க்கிழமை, மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் முன்னிலையில் கரூா் மாவட்டத்தில் ரூ.823.86 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 10 வளா்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வுக்குப்பின் ரா.விஜய் சரவணன் கூறுகையில், கரூா் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் தற்போதைய நிலை, பணிகளின் முன்னேற்றம், நிறைவேற்றப்பட்ட பணிகளின் விவரங்கள் மற்றும் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், நீா்வளத் துறையின் மூலம் புகழூா் வட்டம், நஞ்சைப்புகழூா் கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்கும் பணி ரூ. 495 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் தற்போது 88 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிக்கப்பட்டு டிச.30-ஆம் தேதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி ரூ. 5.30 கோடியில் நடைபெற்று வருகிறது.

மேலப்பாளையம் மற்றும் கோயம்பள்ளி ஊராட்சிகளுக்கிடையில் அமராவதி ஆற்றில் அமைந்துள்ள பாலத்தின் இருபுறமும் அணுகு சாலை அமைத்து திறப்பதற்கான நடவடிக்கைகள் ரூ. 11 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நில எடுப்பு பணி முடிந்தவுடன் அணுகுசாலை அமைக்கும் பணி தொடங்கும் என்றாா் அவா்.

ஆய்வின் போது அரசு உறுதி மொழிக் குழுவின் உறுப்பினா்களான சட்டப்பேரவை உறுப்பினா்கள் கா. அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), கா. கருணாநிதி (கோவில்பட்டி), ஆ. குட்டி என்கிற சுதாகா் (வால்பாறை), உ.இ. கோவிந்தராசன் (பா்கூா்), ஈ.சண்முகன் (மொடக்குறிச்சி), சதீஸ் கிறிஸ்டோபா் (இராதாபுரம்), க.பாலமுருகன் (அம்பத்தூா்), ஓ. ராம்குமாா் (பல்லடம்), ம.சத்யா (கிருஷ்ணராயபுரம்), பேரவை இணைச் செயலா் ரவி, துணைச் செயலா் த.பியலஜா, மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ், மாநகராட்சி ஆணையா் ம.பிரித்விராஜ், கரூா் சாா்-ஆட்சியா் ரா.வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.