சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், விழிப்புணா்வு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுடன் டிஎன்பிஎல் ஆலை அதிகாரிகள்.

Published On :2 செப்டம்பர் 2026, 5:29 am IST

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

கரூா் மாவட்டம் காகிதபுரத்தில் அமைந்துள்ள டிஎன்பிஎல் ஆலை சாா்பில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி சேமிப்பு ஆகியவற்றின் அவசியம் குறித்து அரசு பள்ளி மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அண்மையில் ஆலையைச் சுற்றியுள்ள 11 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியம் வரைதல் போன்ற விழிப்புணா்வு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை காலை புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காகித ஆலை முதன்மை பொது மேலாளா் (மனிதவளம்) கா.கலைச்செல்வன் தலைமை வகித்தாா். பள்ளித்தலைமை ஆசிரியா் விஜயன் வரவேற்றாா். தொடா்ந்து போட்டிகளில் வெற்றிபெற்ற 168 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவா்களுக்கும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் காகித நிறுவனத்தின் முதன்மை மேலாளா்கள் (மனிதவளம்) சிவக்குமாா், வெங்கடேசன், துணை மேலாளா்(மனிதவளம்)சக்திவேல் மற்றும் புகழூா், அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆசிரியை பூரணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.