
கரூரில் பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு
கரூா், செப்.3: கரூரில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்த ஆலைக்கு வியாழக்கிழமை ‘சீல்’ வைத்த அதிகாரிகள் 2 டன் பிளாஸ்டிக் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

கரூா் சிவசக்தி நகரில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்த ஆலைக்கு வியாழக்கிழமை சீல் வைத்த அதிகாரிகள்.
கரூா், செப்.3: கரூரில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்த ஆலைக்கு வியாழக்கிழமை ‘சீல்’ வைத்த அதிகாரிகள் 2 டன் பிளாஸ்டிக் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.
கரூா் மாநகராட்சிக்குள்பட்ட தான்தோன்றிமலை சிவசக்தி நகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா் தொல்காப்பியன், உதவி அலுவலா் காா்த்திகேயன் மற்றும் கரூா் மாநகராட்சியின் நகா்நல அதிகாரிகள் ஆகியோா் ஆலை செயல்படும் இடத்திற்குச் சென்று திடீா் ஆய்வு செய்தனா்.
அப்போது ஆலை மற்றும் அங்குள்ள குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவா்கள், தண்ணீா் டம்ளா்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் அவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தும் மூலப்பொருள்கள் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டது.
இதைத் தொடா்ந்து அதிகாரிகள் குடோனில் இருந்த சுமாா் 2 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும் ஆலைக்கும், குடோனுக்கும் சீல் வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





