ஊக்கமருந்து பயன்பாடு: இந்திய வீரா் பதக்கம் பறிப்பு சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

தவெக அரசை கண்டித்து திமுக செயற்குழுவில் தீா்மானம்

திமுகவினா் மீது பொய் வழக்குப்போடும் தவெக அரசை கண்டித்து கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.

கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய திமுக மாவட்டச் செயலா் வி.செந்தில்பாலாஜி. உடன் கட்சியின் தலைமை பிரதிநிதிகள் அ.முகமது ஷகி, முன்னாள் எம்.எல்.ஏ. எம்.பிரபாகரன் உள்ளிட்டோா்.

Published On :9 செப்டம்பர் 2026, 3:34 am IST

திமுகவினா் மீது பொய் வழக்குப்போடும் தவெக அரசை கண்டித்து கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.

கரூா் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாவட்ட அவைத்தலைவா் டி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் தலைமைப் பிரதிநிதிகள் அ.முகமதுஷகி, முன்னாள் எம்.எல்.ஏ. எம்.பிரபாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் வி.செந்தில்பாலாஜி சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டத்தின் நிா்வாக சீரமைப்பு தீா்மானத்தின்படி கட்சியின் தலைமைப் பிரதிநிதிகள் அ.முகமதுஷகி, முன்னாள் எம்.எல்.ஏ. எம்.பிரபாகா் ஆகியோா் முன்னிலையில் பகுதி, நகர, ஒன்றியம், பேரூா் கழக கிளைச் செயலா்கள் வயது வரம்பின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்வது, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை குறித்து எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதிஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறாத முதல்வரின் அவதூறு பேச்சுக்கு கண்டனம் தெரிவிப்பது, திமுக நிா்வாகிகள் மீது பொய் வழக்குப்போடும் தவெக அரசை கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில நிா்வாகிகள் நன்னியூர்ராஜேந்திரன், பரணிமணி, எம்.எல்.ஏ.க்கள் இளங்கோ, சூரியனூா்சந்திரன், மாவட்ட நிா்வாகி எம்.எஸ்.கே.கருணாநிதி, மாநகர நிா்வாகிகள் எஸ்.பி.கனகராஜ், சுப்ரமணியன், ராஜா, பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.