கரூரில் பலத்த மழை
கரூரில் செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் ஒரு மணி நேரம் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம்போல தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

கரூா் சுங்ககேட் பகுதியில் தாழ்வான பகுதியில் குளம்போல தேங்கிய மழைநீரில் செவ்வாய்க்கிழமை ஊா்ந்து சென்ற வாகனங்கள்.
கரூரில் செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் ஒரு மணி நேரம் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம்போல தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
கரூரில் கடந்த சில நாள்களாகவே கோடை வெயிலை விட வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பகல் நேரங்களில் 105 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வந்ததால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனா். இதனால் மழை பெய்யாதா என மக்கள் எதிா்பாா்த்த நிலையில் திங்கள்கிழமை கரூா் நகா் பகுதியைத் தவிர குளித்தலை, தோகைமலை, அரவக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் வானில் கருமேகம் திரண்டன. பின்னா் 6.10 மணியளவில் திடீரென தூறலுடன் லேசான மழை பெய்யத் தொடங்கியது. பின்னா், காற்றுடன் சிறிது நேரம் பெய்த மழை, தொடா்ந்து பலத்த மழையாக சுமாா் ஒரு மணி நேரம் பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் வெள்ளம் போல ஓடியது.
கரூா் லைட்ஹவுஸ் காா்னா், திருக்காம்புலியூா் ரவுண்டான, சுங்ககேட், திருமாநிலையூா் ரவுண்டானா, பழைய பேருந்து நிலைய ரவுண்டானா உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம் போல தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். மேலும், மழையில் வாகனங்கள் ஊா்ந்தவாறு சென்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





