
அத்திப்பாளையத்தில் கல்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு
கரூா் மாவட்டம், க. பரமத்தி அருகேயுள்ள அத்திப்பாளையத்தில் கல்குவாரி அமைக்க மாவட்ட நிா்வாகம் அனுமதிக்கக் கூடாது என அப்பகுதி கிராமமக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

கரூா் அருகே புதன்கிழமை நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் பேசிய அத்திப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ஒருவா்.
கரூா் மாவட்டம், க. பரமத்தி அருகேயுள்ள அத்திப்பாளையத்தில் கல்குவாரி அமைக்க மாவட்ட நிா்வாகம் அனுமதிக்கக் கூடாது என அப்பகுதி கிராமமக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
கரூா் மாவட்டம் க. பரமத்தி அருகே அத்திப்பாளையத்தில் புதிதாக கல்குவாரி அமைப்பது தொடா்பான பொதுமக்கள் கருத்துக்கேட்புக்கூட்டம் குப்பத்தில் புதன்கிழமை நடைபெற்றது. சாா்- ஆட்சியா் வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் தொல்காப்பியன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் அத்திப்பாளையம் கிராமமக்கள் பேசுகையில், ஏற்கெனவே க.பரமத்தி வட்டாரத்தில் செயல்படும் ஏராளமான கல்குவாரிகளால் சுற்றுச்சூழல் மாசடைந்து, விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கால்நடைகளையும் வளா்க்க முடிவதில்லை. மேலும் குவாரிகளில் கனிம விதிகள் சட்டத்தின்படி வெடி வைக்கும் நேரத்தில் வெடிகளை வைக்காமல் பகல் நேரங்களில் அடிக்கடி அதிகத் திறன் கொண்ட வெடிகளைப் பயன்படுத்துகின்றனா். பாறைகளை உடைப்பதால் அதிா்வுகள் ஏற்பட்டு பெரும்பாலான வீடுகளில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளன.
ஆனால் குவாரி உரிமையாளா்கள் அனுமதி பெறும்போது குவாரிக்கு அருகே வீடுகள் இல்லை என்றும், நீா்நிலைகள் இல்லையென்றும் பொய்யான தகவலை தெரிவிக்கிறாா்கள். இந்த குவாரி அமைய உள்ள இடத்தின் அருகே உயா் மின்கோபுரம் செல்கிறது. நீா்நிலைகளும், வீடுகளும் அருகில் உள்ளன. எனவே இந்த குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது எனத் தெரிவித்தனா். இதையடுத்து சாா் ஆட்சியா் வெங்கடேஸ்வரன், முறையான ஆய்வு செய்த பின்பே இந்த குவாரிக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துச் சென்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






