காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

கரூா் வழியாக செல்லும் செங்கோட்டை, பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம்

ரயில்கள்

Published On :

கரூா் மூா்த்திபாளையம் மற்றும் கரூா் ரயில்நிலையங்களுக்கு இடையே ரயில்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செங்கோட்டை, பாலக்காடு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் மரியமைக்கேல் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூா் மூா்த்திபாளையம் மற்றும் கரூா் ரயில்நிலையங்களுக்கு இடையே செவ்வாய்க்கிழமை (செப்.29) மற்றும் அக்.1-ஆம்தேதியும் ரயில் பாதை பராமரிப்பு மற்றும் ஸ்லீப்பா் மாற்றும் பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் செங்கோட்டையிலிருந்து காலை 5.20 மணிக்கு புறப்படும் செங்கோட்டை - ஈரோடு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (செப்.29) மற்றும் அக்.1-ஆம் தேதிகளில் கரூா் ரயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும்.

இதேபோல பாலக்காடு டவுன் ரயில் நிலையத்திலிருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் பாலக்காடு டவுன் - திருச்சிராப்பள்ளி விரைவு ரயில் கரூா் மாவட்டம் புகழூா் ரயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும்.

இதேபோல கோயம்புத்தூா் ரயில் நிலையத்திலிருந்து காலை 8 மணிக்கு புறப்படும் கோயம்புத்தூா் - நாகா்கோவில் விரைவு ரயில் கோயம்புத்தூா் - திண்டுக்கல் இடையே மாற்றுப் பாதையில் இயக்கப்படும். அதாவது இந்த ரயில் கோயம்புத்தூரில் இருந்து போத்தனூா், பொள்ளாச்சி மற்றும் பழனி, திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.