: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களில் பள்ளிசெல்லா இடைநின்ற குழந்தைகளுக்கு உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையங்கள் நடத்த, அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களிலும் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளுக்கான உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையங்கள் நடத்துவதற்கு 3 ஆண்டுகள் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளுக்கு பணியாற்றிய, விருப்பமுள்ள, தகுதியான அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பங்கள் பெரம்பலூர் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் மே 13 -ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது. உரிய இணைப்புகளுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்டத் திட்ட அலுவலகத்துக்கு மே 22 -ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
மத்திய, மாநில சட்டத்தின் கீழ் நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளுக்காக அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில் பணிபுரியும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், 3 ஆண்டுகள் தணிக்கை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
கல்விக் குழுத் தலைவரிடமிருந்து (மாவட்ட ஆட்சியர்) விண்ணப்பங்கள் ஒப்புதல் பெறப்பட்டு, மாநில திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு இறுதி செய்த பட்டியல் அனுப்பப்பட்டு, தகுதிகள் சரிபார்த்து அறிக்கை வழங்கப்படும்.
பின்னர், தேர்வு செய்யப்பட்ட அரச சாரா தொண்டு நிறுவனத்துக்கு உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையங்கள் நடத்த அனுமதிக்கப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech

கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்!

”தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்!” MK Stalin வெளியிட்ட விடியோ | DMK

உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
