/

வாகனம் மோதிவிவசாயி சாவு

பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில்  விவசாயி ஒருவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

Updated On :13 மே 2013, 1:38 am IST

பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில்  விவசாயி ஒருவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள அசூரைச் சேர்ந்தவர் செல்வராஜ்  (45), விவசாயி. இவர், பெரம்பலூரில் இருந்து அசூருக்கு சனிக்கிழமை இரவு, பெரம்பலூர் - அரியலூர் சாலையில் உள்ள சித்தளி பிரிவு சாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து மருவத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.