கோயில் தேருக்கு மேற்கூரை அமைக்க வலியுறுத்தல்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தழுதாழை கிராமத்தில் உள்ள இளங்காளியம்மன் கோயில் தேருக்கு மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் ம
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தழுதாழை கிராமத்தில் உள்ள இளங்காளியம்மன் கோயில் தேருக்கு மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளது:
வேப்பந்தட்டை வட்டம், தழுதாழை கிராமத்தில் உள்ள அருள்மிகு இளங்காளியம்மன் கோயில் தேரோட்டம் கடந்த மே 27 ஆம் தேதி நடைபெற்றது. அதன்பிறகு, எவ்வித பாதுகாப்புமின்றி சாலையோரத்தில் தேர் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தேரின் பாதுகாப்புக்காக மேற்கூரை அமைக்க தமிழக அரசால் ரூ. 2.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து, பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும், இந்து சமய அறநிலையத் துறை ஆணையரிடமும் புகார் மனு அளித்தும் மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ரூ. 1 கோடி மதிப்பிலான தேருக்கு உடனடியாக மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வேப்பூர் பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் கல்லூரி மாணவிகள் அளித்த மனு: பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரில் உள்ள கலைக் கல்லூரியில் அரும்பாவூர், மலையாளப்பட்டி, தவுத்தாக்குளம், ஆதனூர், ஒட்டக்கோயில் உள்ளிட்ட பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,500-க்கும் அதிகமான மாணவிகள் பயின்று வருகிறோம். இதில், 500-க்கும் மேற்பட்டோருக்கு விடுதி வசதி இல்லை. விடுதியில் தங்கியுள்ள மாணவிகளுக்கு போதுமான உணவு வசதி இல்லாததால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
எனவே, இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு விடுதி வசதியும், போதுமான உணவு
வசதியும் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




