அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகளில் இன்று தீா்ப்புமேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று வாக்கு எண்ணிக்கை!மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்

"மாணவிகளுக்கு படிப்புடன் சமூக அக்கறையும் அவசியம்'

மருத்துவத் துறை மாணவிகளுக்கு படிப்போடு சமூக அக்கறையும் அவசியம் என்றார் அஜய் எலும்பு மூட்டு மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் கே. அறிவழகன்.

Published On :

மருத்துவத் துறை மாணவிகளுக்கு படிப்போடு சமூக அக்கறையும் அவசியம் என்றார் அஜய் எலும்பு மூட்டு மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் கே. அறிவழகன்.

பெரம்பலூர் லட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் பாரா மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் மாணவிகளுக்கான டிஜிட்டல் வகுப்பறையை சனிக்கிழமை திறந்து வைத்து அவர் மேலும் பேசியது: 

   பிறக்கும் போதே யாரும் எதையும் தெரிந்து கொண்டு வருவதில்லை. "கற்க கசடு அற' என்பதற்கு இணங்க மாணவிகள் கேள்வி கேட்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். படிப்பது மட்டுமின்றி, சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த சிந்தனையும் மாணவிகளுக்கு வேண்டும். மேலும், பெண்களுக்கான உரிமைகள் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு நாள் பாடத்தையும், அன்றைய தினமே படித்து விட வேண்டும். மருத்துவத் துறையை தேர்ந்தெடுக்கும் மாணவிகள் இந்தச் சமூகம் சுகாதார அளவீடுகளில் முன்னேற்றம் பெற தங்களால் இயன்ற சேவையைப் புரிய வேண்டும் என்றார் அவர். தொடர்ந்து, மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் எஸ். வைரமணி பயிற்சி அளித்தார்.

  விழாவுக்கு லட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் பாரா மெடிக்கல் சயின்ஸ் கல்லூரி தாளாளர் சி. கருணாகரன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஆ. தங்கராசு முன்னிலை வகித்தார். மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.