
மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது அவசியம்
மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும், அதற்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்க வேண்டும் என்றார் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன்.
மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும், அதற்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்க வேண்டும் என்றார் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன்.
பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் 8-வது ஆண்டு விழா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்ரணியம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில், மாநில மற்றும் மண்டல அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற, விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கிய அவர் மேலும் பேசியது:
மக்கள் சிந்தனைப் பேரவை தொடங்கி 19 ஆண்டுகள் ஆகிவிட்டன. சமூக மாற்றத்தை மையமாக வைத்துதான் மக்கள் சிந்தனைப் பேரவை தொடங்கப்பட்டுள்ளது. சமூக மாற்றத்துக்கு இளைஞர்களின் பங்கு மிகவும் அவசியம் என்பதால் கல்லூரிகளில் மக்கள் சிந்தனைப் பேரவையின் கிளையைத் தொடங்கி வருகிறோம்.
மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டுமானால், அது சம்பந்தமான நூல்களை படிப்பதில் பயனில்லை. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறுகளை வாசித்தால் தன்னம்பிக்கை வரும்.
மாணவர்கள் ஆங்கில திறமையை வளர்த்துக்கொள்ளவதோடு, கல்வியை ஒரு சிறந்த சவாலாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றார் ஸ்டாலின் குணசேகரன்.
கல்லூரி முதல்வர் அ. சந்திரசூடன் ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






