கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

6,668 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள வளாகத்தில் அ.தி.மு.க மாவட்ட மாணவரணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட மாணவரணி செயலரும், பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான இரா. தமிழ்ச்செல்வன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

Published On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள வளாகத்தில் அ.தி.மு.க மாவட்ட மாணவரணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட மாணவரணி செயலரும், பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான இரா. தமிழ்ச்செல்வன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, நகர செயலர் ஆர். ராஜபூபதி, நகராட்சி தலைவர் சி. ரமேஷ், ஒன்றியக்குழுத் தலைவர் து. ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தையல் இயந்திரம், குத்து விளக்கு, குடம், வேட்டி- சேலை, வேளாண் இடுபொருள்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை 6,668 பேருக்கு வழங்கினார் மாவட்டச் செயலர் ஆர்.டி. ராமச்சந்திரன்.

விழாவில் மாவட்ட அணி செயலார்கள் எம்.என். ராஜாராம், மா. வீரபாண்டியன், குரும்பலூர் பேரூர் செயலர் செல்வராஜ், சங்கு சரவணன், டாக்டர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.