தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இன்று "அம்மா' திட்ட முகாம்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) நடைபெறுகிறது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:45 pm

DIN

பெரம்பலூர் மாவட்டத்தில் "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) நடைபெறுகிறது.
பெரம்பலூர் வட்டம், மேலப்புலியூர் (கிழக்கு), வேப்பந்தட்டை வட்டம், பில்லங்குளம், குன்னம் வட்டம், பெருமத்தூர் (வடக்கு), ஆலத்தூர் வட்டம், சிறுகன்பூர் (மேற்கு) ஆகிய வருவாய் கிராமங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளன. இந்த முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, உரிய ஆணைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 இங்கு பெறப்படும் மனுக்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு, ஒப்புகை ரசீது வழங்கப்படும். உடனடியாக தீர்வுகாண இயலாத விண்ணப்பங்கள் குறித்து மனுதாரருக்கு 30 நாள்களுக்குள் பதில் தெரிவிக்கப்படும்.  எனவே, சம்மந்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று, பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.