சட்ட உதவி விழிப்புணர்வு முகாம்
பொதுமக்கள் இலவசமாக சட்ட ஆலோசனைகள் பெற்று பயன்பெறலாம் என பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், கூடுதல் சார்பு நீதிபதியுமான வினோதா அறிவுறுத்தியுள்ளார்.


பொதுமக்கள் இலவசமாக சட்ட ஆலோசனைகள் பெற்று பயன்பெறலாம் என பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், கூடுதல் சார்பு நீதிபதியுமான வினோதா அறிவுறுத்தியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சட்ட உதவிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் துண்டு பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி நீதிபதி வினோதா மேலும் பேசியது:
சட்டம் குறித்து அனைத்துப் பிரிவு மக்களும் அறிந்துகொள்ளும் வகையில், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பட்டு வருகிறது.
இதில் சிவில், குடும்ப நல வழக்குகள், வங்கிக் கடன், குற்றவியல் வழக்குகள், ஜாமீனில் வெளியே வருதல், நீதிமன்றத்துக்கு செல்லாமல் சமரச தீர்வு காண்பது,
மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, காசோலை கொடுக்கல்- வாங்கல் மற்றும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் மனுவாக சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் அளித்து உரிய தீர்வு காணலாம். மேலும், வழக்கு தாக்கல் செய்தவரோ அல்லது எதிர் வழக்கு தொடுப்பவரோ சட்ட உதவிகள் பெற தகுதியானவர்கள். எனவே, பொதுமக்கள் இலவசமாக சட்ட ஆலோசனைகளை பெற்று பயன்பெறலாம் என்றார்.
இந்நிகழ்ச்சியில், சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர் டி. வெள்ளைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...