வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சாரணர் இயக்க  ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

பெரம்பலூர் மாவட்ட சாரண, சாரணியர் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம், பெரம்பலூர் மாவட்ட பயிற்சி மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 12:28 am

DIN

பெரம்பலூர் மாவட்ட சாரண, சாரணியர் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம், பெரம்பலூர் மாவட்ட பயிற்சி மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமை தொடங்கி வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி பேசியது:  பள்ளிக்கல்வித் துறையின் அறிவுறுத்தலுக்கிணங்க, அனைத்துப் பள்ளிகளிலும் சாரண, சாரணியர் இயக்கம் தொடங்க வேண்டும். சாரணர் இயக்க மாணவர்கள் அதிக அளவில் ராஜ்யபுரஸ்கார் விருது மற்றும் ராஸ்டிரபதி விருது பெறுவதற்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றார் அவர். இதில், மாவட்டச் செயலர் க. செல்வராஜ், சாரணிய பயிற்சி ஆணையர் தனலட்சுமி, மாவட்ட உதவி செயலர் தனபால், மாவட்ட அமைப்பு ஆணையர்கள் சரோஜா, சந்திரசேகர் ஆகியோர் சாரண இயக்க அடிப்படைகள், சாரணர் முன்னேற்றப்படி நிலைகள், இயக்கப் பாடல்கள், உறுதிமொழி, சட்டம், சாரண ஆசிரியர்களின் கடமைகள், அணிமுறைப் பயிற்சி ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளித்தனர்.
மாவட்ட கல்வி அலுவலர் வெ. பிருதிவிராஜன் முன்னிலையில் நடைபெற்ற இப்பயிற்சியில் மொத்தம் 73 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.  இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் குணாளன், துரை, ஜான்சிராணி, குகனேஸ்வரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.