பெரம்பலூர் தேரடியில் நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், மாநில சுயாட்சி மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நகர செயலர் தங்க. சண்முகசுந்தரம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலர் சி. தமிழ்மாணிக்கம், மாநில செயலர் வீர. செங்கோலன், நெறியாளர்கள் சு. திருமாறன், மண்டல செயலர் இரா. கிட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பொதுச் செயலர் எழுத்தாளர் துரை. ரவிக்குமார், மாநில சுயாட்சி மாநாட்டின் தீர்மானங்களை விளக்கினார்.
கூட்டத்தில், மக்களவை தொகுதி செயலர் தமிழாதன், மாநில துணைச் செயலர்கள் பேராசிரியர் தமிழ்க்குமரன், ராசித் அலி, வழக்குரைஞர்கள் பேரா. முருகையன், ரத்தினவேல், இரா. ஸ்டாலின், மாவட்ட துணை செயலர் ந. கிருஷ்ணகுமார், மாவட்ட பொருளாளர் அ. கலையரசன், நகர பொறுப்பாளர்கள் பூ. சீனிவாசன், து. சிவசுப்பிரமணியன், ம. மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நகர பொருளாளர் இளையராஜா வரவேற்றார். நிர்வாகி பழனிச்சாமி நன்றி கூறினார். இதேபோல, பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்திலும் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.