மதனகோபால சுவாமி கோயிலில் கேதார கெளரி பூஜை

பெரம்பலூரில் உள்ள பஞ்ச பாண்டவருக்கு தனி சன்னதிகொண்ட மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீமதனகோபால சுவாமி கோயிலில் தீபாவளி பண்டிகை
Updated on
1 min read

பெரம்பலூரில் உள்ள பஞ்ச பாண்டவருக்கு தனி சன்னதிகொண்ட மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீமதனகோபால சுவாமி கோயிலில் தீபாவளி பண்டிகை மற்றும் ஐப்பசி மாதப்பிறப்பை முன்னிட்டு பெருமாளுக்கு வெங்கடாஜலபதி அலங்காரமும், தாயாருக்கு மகாலட்சுமி அலங்காரமும் செய்யப்பட்டு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
பெரம்பலூரில் ஆண்டுதோறும் தீபாவளி நாளில் மரகதவல்லித் தாயார் சமேத மதனகோபால சுவாமி கோயிலில் உள்ள தாயார் சன்னதியில் கேதார் கெளரி விரத பூஜை நடைபெற்று வருகிறது. அதன்படி, கேதார் கெளரி பூஜையை முன்னிட்டு, அக்ரகாரத்தில் உள்ள கோயில் பரம்பரை ஸ்தானீகர் இல்லத்தில் அம்பாள் சிலை, அலங்கரிக்கப்பட்டு, அங்கிருந்து மரகதவல்லித் தாயார் சன்னதிக்கு கொண்டுவரப்பட்டது.  
 அங்கு, கலசம் ஆவாகனம் செய்யப்பட்டு விநாயகர் பூஜை, அஷ்டோத்திர பூஜை நடத்தப்பட்டு,  கேதார கெளரி பூஜையின் மகத்துவம் குறித்து பக்தர்களுக்கு விளக்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜைகளை பொன். நாராயணன் அய்யர் மற்றும் மணிகண்டன் அய்யர் ஆகியோர் நடத்திவைத்தார்.
 இந்த பூஜையில் பெரம்பலூர் நகரைச் சேர்ந்த  500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு நிவேதனம் செய்து அம்பாளை வழிபட்டனர். பூஜையின்போது மஞ்சள் சரடு வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com