பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத்தேர்தல் முறைகேடுகளைக் கண்டித்து, வி.களத்தூர், பசும்பலூர் ஆகிய இடங்களில் தி.மு.கவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட வி.களத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் நிர்வாகப் பதவிக்கு போட்டியிட பலர் விண்ணப்பித்திருந்தனர். செவ்வாய்க்கிழமை மாலை வரை இறுதிப் பட்டியல் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், அ.தி.மு.கவைச் சேர்ந்த 11 பேரின் விண்ணப்பம் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவித்து, இறுதி வேட்பாளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் வெளியிடப்பட்டது.
இதையறிந்த தி.மு.கவினர் மாவட்ட செயலாளர் சி. ராஜேந்திரன் தலைமையில், வேப்பந்தட்டை ஒன்றிய பொறுப்பாளர் ஜெகதீசன், நகரச் செயலாளர் எம். பிரபாகரன், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன் ஆகியோர் வி.களத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை புதன்கிழமை முற்றுகையிட்டனர். தகவலறிந்த மங்களமேடு சரக துணை கண்காணிப்பாளர் கார்த்திக், அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதேபோல, வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நிர்வாகப் பதவிக்கான இறுதிவேட்பாளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலிலும் அ.தி.மு.க-வினரின் பெயர்களே இடம்பெற்றிருந்தது.
இதையறிந்த, தி.மு.க-வினர், அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சி. ராஜேந்திரன் தலைமையில் பசும்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் செய்தனர்.
பின்னர், பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்ற தி.மு.கவினர், வி. களத்தூர், பசும்பலூர் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நிர்வாகப் பதவிகளுக்கான தேர்தலை ரத்து செய்யக் கோரி மனு அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அதிமுகவில் மீண்டும் பொறுப்பு! துணைப் பொதுச் செயலராக எஸ்.பி. வேலுமணி நியமனம்!

ரஜினியின் தர்மன் படப்பிடிப்பு தொடக்கம்..! புதிய போஸ்டர்!
இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய விஜய்! பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் திடீர் மாற்றம்!!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


