ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

போக்குவரத்து போலீஸாரை கண்டித்து சாலை மறியல்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே அரியலூர் மாவட்ட போக்குவரத்து போலீஸாரை கண்டித்து இளைஞர்களும், பொதுமக்களும் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 9:31 am IST

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே அரியலூர் மாவட்ட போக்குவரத்து போலீஸாரை கண்டித்து இளைஞர்களும், பொதுமக்களும் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள அல்லிநகரம் கிராமத்தில் வாகனங்கள் எடை இயந்திரம் (வே பிரிட்ஜ்) உள்ளது. இப்பகுதியில், அரியலூர் மாவட்ட போக்குவரத்து போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபடுவர். அதன்படி, போக்குவரத்து ஆய்வாளர் ஜெயபால் தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
அப்போது, பெரம்பலூரில் இருந்து ஜல்லிக் கற்களை ஏற்றிச்சென்ற டிப்பர் லாரியை போலீஸார் நிறுத்தியதால், அவ்வழியே மோட்டார் சைக்களில் வந்த மாக்காயிகுளம் கிராமத்தை சேர்ந்த சங்கர் மகன் சந்துரு (17) டிப்பர் லாரியில் மோதி பலத்த காயமடைந்தார். 
காயமடைந்த சந்துருவை மருத்துவமனைக்கு அனுப்பாமல், அங்கேயே போட்டுவிட்டு போக்குவரத்து போலீஸார் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த அப்பகுதி இளைஞர்களும், பொதுமக்களும், போக்குவரத்து போலீஸாரின் செயலை கண்டித்தும், தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபடுவதைத் தவிர்க்க வலியுறுத்தியும் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
தகவலறிந்து வந்த குன்னம் போலீஸார் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு சென்றனர். இதனால், பெரம்பலூர்- அரியலூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காயமடைந்த இளைஞர் சந்துரு அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.