"மருத்துவம், வேளாண், பொறியியல் கல்லூரிகள் வேண்டும்'
பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவம், வேளாண்மை, பொறியியல் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவம், வேளாண்மை, பொறியியல் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூரில் இந்திய மாணவர் சங்க பெரம்பலூர் மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.) சங்கத்தின் மாவட்ட செயலர் ஸ்டாலின் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் நிவாஸ், மதுபாலா, ரேகா, முகிலம், விஷ்ணு பிரீத்தா, நர்மதா, குணமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க மாவட்ட செயலர் ப. செல்வக்குமார் தொடக்கவுரையாற்றினார்.
மாநில துணைத் தலைவர் நிரூபன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆறு. பிரகாஷ், து. அருணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த மாநாட்டில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து பள்ளிகளை இழுத்து மூடும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும். விடுதி மாணவர்களுக்கான உணவுத் தொகையை உயர்த்தி, தரமான உணவு வழங்க வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளி, கல்லூரிகளில் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப வேண்டும். அரசுப் பள்ளி, கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், பல்கலைக் கழக மானியக் குழுவை கலைத்துவிட்டு அரசு கல்லூரிகளை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் அரங்க மாநிலச் செயலர் சி. கருணாகரன், முன்னாள் மாவட்டச் செயலர் செல்வக்குமார், பி. ரமேஷ், கவிஞர்கள் ராமர், அகவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

