பெரம்பலூர் அருகே களரம்பட்டியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், தமிழ் இலக்கிய மன்ற விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். உதவித்தலைமை ஆசிரியர் சாலமன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பெரம்பலூர் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை தலைவர் வேல். இளங்கோ, எண்ணித்துணிக என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். ஆசிரியர் த. மாயகிருஷ்ணன் அறிமுக உரையாற்றினார். இதில், தமிழ்ச்செம்மல் விருதுபெற்ற முன்னாள் தலைமை ஆசிரியர் வை. தேசிங்குராஜன், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழாசிரியை ஜெயந்தி வரவேற்றார். ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.