பெரம்பலூர் புறநகர்ப் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், மின் வாரிய கணக்கீட்டுப் பிரிவு ஊழியர்கள் சங்க சிறப்புப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, வட்ட கன்வீனர் எஸ். காசிநாதன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் சி. ராஜகுமாரி, எம். பிச்சைபிள்ளை, சேகர், கோபால், வீரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலர் எஸ். தனலட்சுமி, மாநில துணைத் தலைவர் எஸ். அகஸ்டின், சிஐடியூ பெரம்பலூர் மாவட்ட செயலர் ஆர். அழகர்சாமி ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், மின் வாரியத்தில் வருவாய் ஈட்டித்தரும் பிரிவான கணக்கீட்டுப் பிரிவுக்கு கணினி, பிரிண்டர், காகிதம் உள்ளிட்ட தரமான உபகரணங்களை வழங்க வேண்டும். மின் கணக்கீட்டாளர்களுக்கு ரெயின் கோட் மற்றும் அடையாள அட்டை வழங்க வேண்டும். பெண் ஊழியர்கள் நலன் கருதி விசாக கமிட்டி அமைக்க வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதா 2018- ஐ திரும்ப பெற வலியுறுத்தி, 2019 ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








