வேப்பந்தட்டை அருகே சாலைப் பணிக்கு பூமிபூஜை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே ரூ. 6.72 கோடியில் தார்ச் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே ரூ. 6.72 கோடியில் தார்ச் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன் பேசியது:
நெடுஞ்சாலை மற்றும் கிராம சாலைத் துறை மூலம் நபார்டு திட்டத்தின் கீழ், ரூ. 6.72 கோடியில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், சாத்தனவாடி, நெய்குப்பை, வெண்பாவூர் ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் சுமார் 15 கி.மீ. நீளத்தில் தார்ச் சாலை அமைக்கப்பட உள்ளது.
இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு
பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். வேப்பந்தட்டை வட்டாரத்தில் நபார்டு, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல துறைகள் மூலமாக, இதுவரை ரூ. 36 கோடியில் தார்ச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல, ஒரு சில சாலைகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் விடுத்த கோரிக்கை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் சாலை அமைத்துத் தரப்படும் என்றார் அவர்.
தொடர்ந்து, குன்னம் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி. ராமச்சந்திரன் பேசியது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விட்டுச்சென்ற அனைத்துப் பணிகளையும் நிறைவேற்ற தற்போதைய தமிழக அரசு முனைப்புடன் செயல்படுகிறது. அதனடிப்படையில், பல்வேறு பகுதிகளில் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பும், புதிய சாலை அமைக்கும் பணிகளும் நடைபெறுகிறது. எம்எல்ஏக்களிடம் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் அனைத்தையும் பரிசீலித்து, தமிழக அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதனடிப்படையில், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது என்றார் அவர்.
முன்னதாக, சாலைக்கான பூமி பூஜையை எம்எல்ஏக்கள் இரா. தமிழ்ச்செல்வன், ஆர்.டி. ராமச்சந்திரன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்
நிகழ்ச்சியில், உதவிப் பொறியாளர் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் உதவி பொறியாளர் து. ராஜா, வேப்பந்தட்டை ஒன்றியச் செயலர் டி.என். சிவப்பிரகாஷம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...