மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வேப்பந்தட்டை அருகே சாலைப் பணிக்கு பூமிபூஜை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே ரூ. 6.72 கோடியில் தார்ச் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 12:59 am

DIN

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே ரூ. 6.72 கோடியில் தார்ச் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ  இரா. தமிழ்ச்செல்வன் பேசியது:
நெடுஞ்சாலை மற்றும் கிராம சாலைத் துறை மூலம் நபார்டு திட்டத்தின் கீழ், ரூ. 6.72 கோடியில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், சாத்தனவாடி, நெய்குப்பை, வெண்பாவூர் ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் சுமார் 15 கி.மீ. நீளத்தில் தார்ச் சாலை அமைக்கப்பட உள்ளது. 
இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு 
பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். வேப்பந்தட்டை வட்டாரத்தில் நபார்டு, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல துறைகள் மூலமாக, இதுவரை ரூ. 36 கோடியில் தார்ச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 
இதேபோல, ஒரு சில சாலைகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் விடுத்த கோரிக்கை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் சாலை அமைத்துத் தரப்படும் என்றார் அவர்.
தொடர்ந்து, குன்னம் தொகுதி எம்எல்ஏ  ஆர்.டி. ராமச்சந்திரன் பேசியது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விட்டுச்சென்ற அனைத்துப் பணிகளையும் நிறைவேற்ற தற்போதைய தமிழக அரசு முனைப்புடன் செயல்படுகிறது. அதனடிப்படையில், பல்வேறு பகுதிகளில் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பும், புதிய சாலை அமைக்கும் பணிகளும் நடைபெறுகிறது. எம்எல்ஏக்களிடம்  பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் அனைத்தையும் பரிசீலித்து,  தமிழக அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதனடிப்படையில், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது என்றார் அவர்.
முன்னதாக, சாலைக்கான பூமி பூஜையை எம்எல்ஏக்கள்  இரா. தமிழ்ச்செல்வன், ஆர்.டி. ராமச்சந்திரன் ஆகியோர் தொடக்கி வைத்தனர் 
நிகழ்ச்சியில், உதவிப் பொறியாளர் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் உதவி பொறியாளர் து. ராஜா, வேப்பந்தட்டை ஒன்றியச் செயலர் டி.என். சிவப்பிரகாஷம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.