நீட் தேர்வு விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட ரங்கில், தனலட்சுமி சீனிவாசன் அகாதெமி மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச்
Updated on
1 min read

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட ரங்கில், தனலட்சுமி சீனிவாசன் அகாதெமி மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கேரியர் பாயின்ட் கோட்டா சார்பில் நீட் தேர்வை எதிர்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. 
கருத்தரங்கை தொடக்கி வைத்து கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் பேசியது:  மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் பயில வேண்டும். இந்த இரண்டும் இருந்தால், நீட் தேர்வு மட்டுமன்றி, வாழ்க்கையிலும் வெற்றி பெறலாம் என்றார் அவர்.   தொடர்ந்து, கேரியர் பாயின்ட் நிர்வாகிகள் நித்தின் தாசித், உத்தம் ஜாஷ்வால், சமீர் ஆகியோர் நீட் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது, நீட்டின் அவசியம் குறித்து விளக்கினர். 
கருத்தரங்கில், கல்வி நிறுவனங்களின் செயலர் நீல்ராஜ், கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் எஸ்.எச். அப்ரோஸ், பள்ளி முதல்வர்கள் கோவிந்தசாமி, மாலா, மரிய புஷ்பா தீபா மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்பு அலுவலர் கிரீஸ் வரவேற்றார். கல்லூரி விரிவுரையாளர் செளத்ரி நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com