பெரம்பலூர் மாவட்ட அளவிலான கிரிக்கெட் அணிக்கு 30 வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தும் மாநில அளவில், மாவட்டங்களுக்கு இடையிலான தொடர் கிரிக்கெட் போட்டியானது, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் ஆக. 1, 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதையொட்டி, பெரம்பலூர் மாவட்ட அணிக்காக விளையாடும் விளையாட்டு வீரர்கள் தேர்வு முகாம், பெரம்பலூர்- துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பள்ளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இத் தேர்வு முகாமில், 17 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவர்கள் 200 பேர் பங்கேற்றனர். தேர்வு முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு பெளலிங், பேட்டிங், பீல்டிங் ஆகியவை நடத்தப்பட்டு, சிறந்த முறையில் விளையாடிய 30 வீரர்கள் பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் அணிக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








