பெரம்பலூருக்கு புதன்கிழமை வந்தடைந்த முருகனின் வேல் சங்கம ரத யாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஹிந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பில், பங்குனி உத்திர வழிபாட்டை முன்னிட்டு, முருகனின் வேல் சங்கம யாத்திரை தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரையானது, பெரம்பலூர் நகருக்கு புதன்கிழமை வந்தடைந்தது. பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில், இந்து அமைப்புகளின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, பாலக்கரை, ரோவர் வளைவு, முருகன் கோயில், விநாயகர் கோயில், இந்திரா நகர், தேரடி, எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட இடங்களில் யாத்திரைக்கு பூஜை செய்யப்பட்டது. முன்னதாக, இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
இந்த ரதயாத்திரை ஊர்வலத்தில் விஸ்வ இந்து பரிஷத், இந்து முன்ணனியை சேர்ந்த நடராஜன், வேல்முருகன், கஜேந்திரன், மயூரப்பிரியன், சேவாபாரதியை சேர்ந்த பாண்டியன், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இளங்கோவன், சிவசங்கரன், ஈஸ்வர் மணி, கலைச்செல்வன், முருகேசன், வாசுதேவன், மகாமூர்த்தி உள்பட பொதுமக்களும், பெண்களும் கலந்து கொண்டு வழிபட்டனர். பின்னர், இந்த ரத யாத்திரை துறையூருக்கு சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் மிட்செல் ஸ்டார்க்!

காவியக் காதல் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் - புகைப்படங்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படம்..! டைட்டில் டீசர் ரிலீஸ்!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

