பெரம்பலூர், அரியலூரில் மக்கள் குறைகேட்பு கூட்டம்
பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து 239 மனுக்கள் பெறப்பட்டன.


பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து 239 மனுக்கள் பெறப்பட்டன.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்களிடமிருந்து 239 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில், மகளிர் திட்ட இயக்குநர் சு. தேவநாதன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) விஜயலட்சுமி உள்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
அரியலூர்...: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 286 கோரிக்கை மனுக்களை ஆட்சியர் மு. விஜயலட்சுமி பெற்றார்.
கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் 30 பேருக்கு ரூ. 4 லட்சம் மதிப்பிலான சாசோலைகளை ஆட்சியர் வழங்கிப் பாராட்டினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன், சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் அ.பூங்கோதை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...