பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த கல்லூரி மாணவன் விஷம் குடித்து சனிக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டார்.
ஆலத்தூர் வட்டம், பொம்மனப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் தனராஜ் (25). இவர், பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ படித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தனராஜ் கல்லூரிக்கு செல்லவில்லையாம். இதையறிந்த அவரது பெற்றோர் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தனராஜ், சனிக்கிழமை மாலை மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு, அங்குள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகே மயங்கிக் கிடந்தாராம். இதையறிந்த அப்பகுதியினர் மாணவனை மீட்டு, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், கொண்டு செல்லும் வழியிலேயே தனராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து நாகராஜ் அளித்த புகாரின்பேரில், பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி!

கடலூர் அருகே ரௌடி கொலை: போலீஸார் விசாரணை

பெட்ரோல், டீசல் விலையும் விரைவில் உயர்கிறதா?

ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

