பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கணவன், மனைவி வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சீதேவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் (6). இவரது மனைவி சங்கீதா (45). இருவரும், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், இரூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனர். பின்னர், புதன்கிழமை மாலை சொந்த கிராமத்துக்கு செல்வதற்காக, மோட்டார் சைக்கிளில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரூரில் சாலையைக் கடக்க முயன்றனர். அப்போது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராஜேந்திரன், அவரது மனைவி சங்கீதா ஆகியோர் பலத்த காயமடைந்து, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தனர்.
புகாரின்பேரில் பாடாலூர் போலீஸார் வழக்கு பதிந்து, கார் ஓட்டுநர் கேரளாவைச் சேர்ந்த சுஜீத் சந்திரனை (40) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை; கன்னட அமைப்பினர் போராட்டம்: தமிழக அரசுப் பேருந்துகள் ஓசூர் வரை இயக்கம்!

இந்தியாவைக் காத்த வீரர்களுக்கு நன்றி: கார்கில் போர் நினைவுநாளில் பிரதமர் மோடி

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் நிராகரிப்பு! காரணம் என்ன?

அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரானுக்கு உதவும் ரஷியா: உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


