வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான ஞாயிற்றுக்கிழமை நடந்த சிறப்பு முகாமில் 11,505 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2019 ஆம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு 18 வயது பூர்த்தியடைந்த நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், நீக்கம், முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளவும் 1.9.2018 முதல் 31.10.2018 வரை விண்ணப்பங்கள் பெற ஆணையிட்டுள்ளது.
அதன்படி, பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பேரளி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி, சித்தளி அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா கூறியது:
பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 332 வாக்குச் சாவடிகளிலும், குன்னம் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 320 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. முகாம்களில் பெயர் சேர்த்தலுக்கு படிவம் 6, பெயர் நீக்கலுக்கு படிவம் 7, திருத்தம் மேற்கொள்வதற்கு படிவம் 8, முகவரி மாற்றம் (ஒரே சட்டப்பேரவை தொகுதிக்குள்) படிவம் 8- ஏ ஆகிய விண்ணப்பங்கள் உரிய ஆவணங்களுடன் அளிக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த செப். 1 முதல் அக். 4 ஆம் தேதி வரை நடைபெற்ற சிறப்பு முகாமில் 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பெயர் சேர்க்க 7,668 நபர்களும், நீக்க 111 நபர்களும், திருத்தம் மேற்கொள்ள 3,196 நபர்களும், முகவரி மாற்றம் (ஒரே சட்டப்பேரவை தொகுதிக்குள்) செய்ய 528 நபர்களும் என, மொத்தம் 11,505 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர்.
ஆய்வின்போது, வருவாய்க் கோட்டாட்சியர் விஸ்வநாதன், குன்னம் வட்டாட்சியர் சிவா ஆகியோர் உடனிருந்தனர்.
அரியலூர்: அரியலூர் மாவட்ட அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க,திருத்த முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாலாஜாநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் பெரியநாகலூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற பணிகளை ஆட்சியர் மு. விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் தெரிவித்தது:
மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்யும் பணிகள் வரும் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதுசமயம் வரும் ஜனவரி 1, 2019 அன்று வரை தகுதி நாள்களாக கொண்டு 18 வயது நிரம்பிய அனைவரும் விண்ணப்பங்கள் கொடுத்து தங்களது பெயரை பதியலாம். மேலும், பெயர் திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கும் விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.
கோட்டாட்சியர் சத்தியநாராயணன், வட்டாட்சியர் முத்துலட்சுமி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு

42 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அஞ்சல்காரருக்கு பிரிவு உபசார விழா

மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


