பெரம்பலூர் அருகே இயற்கை விவசாயத்தில் ஆர்வமுடைய உழவர்களுக்கு, லாபகரமான இயற்கை விவசாய வழிமுறைகள் தொடர்பான நேரடி செயல்விளக்கப் பயிற்சி முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் அருகே உப்போடையில் நடைபெற்ற முகாமில், நிலத்தை சீரமைத்தல், விதை தேர்வு செய்தல், நாற்று உருவாக்குதல், மேட்டுப் பாத்தி அமைத்தல், மூடாக்கு அமைத்தல், கீரை, காய்கறிகள் சாகுபடி, மாடித் தோட்டம் அமைத்தல், இயற்கை இடுபொருள்கள் தயாரித்தல் மற்றும் பயன்படுத்துதல், இயற்கை பூச்சி விரட்டி முறைகள் குறித்து நேரடி களப்பயிற்சி மற்றும் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
மேலும், லாபகரமாக இயற்கை விவசாயம் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கைக்குத்தல் அரிசி, ஊரவைத்த கம்பு, கேழ்வரகு, பாணகம் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இயற்கை விவசாயிகள் கார்த்திகேயன், ஆறுமுகம் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

