
களரம்பட்டியில் தூய்மை இந்தியா விழிப்புணர்வுப் பேரணி
பெரம்பலூர் அருகேயுள்ள களரம்பட்டி அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஜெனீவா தினம் மற்றும் தூய்மை இந்தியா விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் அருகேயுள்ள களரம்பட்டி அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஜெனீவா தினம் மற்றும் தூய்மை இந்தியா விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார் பள்ளித் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன். உதவித் தலைமை ஆசிரியர் சாலமன் முன்னிலையில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், கழிப்பறை பயன்பாடு, தனி நபர் சுத்தம், மனிதநேயம் காத்தல், தீவிரவாதம் ஒழித்தல், சகோதரத்துவம் பேணுதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளைக் கையில் ஏந்தி முழக்கமிட்டுச் சென்றனர்.
பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வுப் பேரணி, கிராமத்தின் பிரதான வீதிகள் வழியே சென்று, மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.
தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பின்னர், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், ஆசிரியர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிகளில், பள்ளி ஆசிரியர்கள் புவனேஸ்வரி, செந்தில்குமார், சுதாகர், ஜெபக்குமார், தம்புசாமி, ராஜேந்திரன், கவிதா, ஜெயந்தி, இளையோர் செஞ்திலுவை சங்கம் மற்றும் சாரண சாரணியர் இயக்கத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இளையோர் செஞ்சிலுவை சங்க மாவட்ட இணைக் கன்வீனர் முனைவர் த. மாயக்கிருஷ்ணன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



