பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 71-வது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஜெயலலிதா உருவ சிலைக்கு, பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.பி. மருதராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், ஞாயிற்றுக்கிழமை பிறந்த 3 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
பின்னர், சங்குப்பேட்டை, துறைமங்கலம், நான்கு சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் கட்சி கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும், ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
பெரம்பலூர் கெளதம புத்தர் காது கேளாதோர் சிறப்புப் பள்ளியிலும், தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் துறைமங்கலம் அன்பகம் மன வளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. சத்திரமனையில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளில், நகரச் செயலர் ஆர். ராஜபூபதி, ஒன்றியச் செயலர்கள் என்.கே. கர்ணன், பி. கிருஷ்ணசாமி, மாவட்ட அணி செயலர்கள் எம்.என். ராஜாராம், செல்வக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
வனத்துறை சார்பில்:
பெரம்பலூர் மாவட்ட வனத்துறை சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை ஆட்சியர் வே. சாந்தா தொடக்கி வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தூத்துக்குடியில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 இளைஞா்கள் கைது

சேலத்தில் 3 மதுக்கடைகளை அகற்றக் கோரி பெண்கள் மனு






