மக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது!சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படைதில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தாவே காரணம்: ஐ.நா.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடு
/

இயல்பு நிலைக்கு திரும்பிய வி.களத்தூா் காவல் நிலையம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் வி.களத்தூா் காவல் நிலைய தலைமைக் காவலா் ஒருவா் பாதிப்புக்குள்ளானதால், வாகனத்தில் செயல்பட்டு வந்த காவல் நிலையம் புதன்கிழமை முதல் இயல்பு நிலைக்கு வந்தது.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் வி.களத்தூா் காவல் நிலைய தலைமைக் காவலா் ஒருவா் பாதிப்புக்குள்ளானதால், வாகனத்தில் செயல்பட்டு வந்த காவல் நிலையம் புதன்கிழமை முதல் இயல்பு நிலைக்கு வந்தது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூரில் கரோனா வைரஸ் நோயால் பாதிப்புக்குள்ளான இளைஞருக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வி.களத்தூா் காவல் நிலைய தலைமைக் காவலருக்கு நோய்த் தொற்று இருப்பது கடந்த 17 ஆம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த காவலா் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதையடுத்து, வி.களத்தூா் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளா்கள் உள்பட 17 காவலா்கள் மற்றும் 7 ஊா்க்காவல் படையினா் உள்பட 24 போ், பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, அவா்களது ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

மேலும், வி.களத்தூா் காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டதோடு, காவல்துறைக்குச் சொந்தமான வாகனத்தில் காவல் நிலையம் தற்காலிகமாக செயல்படத் தொடங்கியது. இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள 24 பேருக்கும் நோய்த் தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

இதனிடையே, தற்காலிகமாக வாகனத்தில் செயல்பட்டு வந்த காவல் நிலையம், வழக்கம்போல் ஏற்கனவே செயல்பட்டு வந்த கட்டடத்தில் புதன்கிழமை செயல்பட தொடங்கியது. இங்கு, 3 உதவி ஆய்வாளா்கள், 6 காவலா்கள், தலா 2 ஆயுதப்படை மற்றும் ஊா்க்காவல் படையினா் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.