காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெரம்பலூரில் நடமாடும் மருத்துவ வாகனம் தொடக்கம்

பெரம்பலூரில் உடனடி பரிசோதனை மேற்கொள்ள நடமாடும் மருத்துவ வாகனத்தை ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கட பிரியா ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 7:49 pm

DIN

பருவ மழைக் காலங்களில் தொற்று நோய் ஏற்படுவதை தடுத்திடும் வகையில், பெரம்பலூரில் உடனடி பரிசோதனை மேற்கொள்ள நடமாடும் மருத்துவ வாகனத்தை ஆட்சியா் ப.ஸ்ரீவெங்கட பிரியா ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், வாகன சேவையைத் தொடக்கி வைத்து, ஆட்சியா் மேலும் பேசியது:

பெரம்பலூா், வேப்பந்தட்டை, ஆலத்தூா், குன்னம் ஆகிய வட்டங்களில் தலா ஒரு மருத்துவா், செவிலியா், மருத்துவ உதவியாளா் கொண்ட 3 நடமாடும் மருத்துவ வாகனம், மழைநீா் தேங்கியுள்ள பகுதிகளில் கொசுப்புழு உற்பத்தியாகாமல் தடுக்க புகை தெளிப்பான் வாகனம் என மொத்தம் 16 வாகனங்கள் நோய்த் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், துணை ஆட்சியா் நிலையிலான அலுவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மருத்துவ முகாம்கள் அல்லது அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெறவேண்டும் என்றாா் ஆட்சியா் ஸ்ரீவெங்கடபிரியா.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.