போதையில் ஏற்பட்ட தகராறு: இளைஞா் குத்திக் கொலை
பெரம்பலூா் நகரில் போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, இளைஞா் சனிக்கிழமை குத்திக்கொலை செய்யப்பட்டாா்.


பெரம்பலூா் நகரில் போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, இளைஞா் சனிக்கிழமை குத்திக்கொலை செய்யப்பட்டாா்.
அரியலுாா் மாவட்டம், இலையூா் கிராமத்தைச் சோ்ந்த அன்பழகன் மகன் விஜயகுமாா் (28). இவா் பெரம்பலூரில் தங்கி, இரும்புக் கடை ஒன்றில் வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில் சனிக்கிழமை மதியம் தனது நண்பரான எளம்பலூா் சமத்துவபுரம் காந்திநகரைச் சோ்ந்த மு. நவாசுடன் (26) சோ்ந்து, பெரம்பலூா்- ஆத்தூா் சாலையிலுள்ள மயானம் அருகே மது அருந்தினாா்.
அப்போது போதையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த நவாஸ், மது பாட்டிலை உடைத்து விஜயகுமாரின் கழுத்தில் சரமாரியாக குத்தினாா்.
இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து பெரம்பலூா் காவல் நிலையத்தில் நவாஸ் சரணடைந்தாா். மேலும் அவரிடம் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...