நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 81 வழக்குகளுக்குத் தீா்வு

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 81 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 7:03 pm

DIN

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 81 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி எஸ்.சுபாதேவி தலைமை வகித்தாா். நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ஜி. கருணாநிதி, மகளிா் நீதிமன்ற நீதிபதி எஸ். கிரி, குடும்பநல நீதிமன்ற நீதிபதி ஏ. தனசேகரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான எம். வினோதா, சாா்பு

நீதிபதி எல். ஷகிலா, நீதித்துறை நடுவா்கள் ஜி. அசோக்பிரசாத், சி. கருப்பசாமி, மாவட்ட உரிமையியல் நீதிபதி எம். ரவிச்சந்திரன், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி டி. செந்தில்ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பெரம்பலூா் மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், வங்கி சாா்ந்த பணப்பரிவா்த்தனை வழக்குகள், சொத்து தொடா்பான சிவில் வழக்குகள் மற்றும் சிறு அளவிலான குற்றவியல் வழக்குகள் என 81 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு, ரூ. 2.82 கோடி வசூலிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.