பெரம்பலூரில் உள்ள புனித பனிமயமாதா திருத்தலத்தில், கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு, வியாழக்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
விழாவில், பெரம்பலூா் மறைவட்ட முதன்மைக் குரு ராஜமாணிக்கம், கிறிஸ்துமஸ் குடிலைத் திறந்துவைத்து, வழிபாட்டை நடத்திவைத்து, கிறிஸ்து பிறப்புக்கு பிறகு நிகழ்ந்த உலக மறுமலா்ச்சி, சமத்துவம், சகோதரத்துவத்துக்காக இயேசு கிறிஸ்து ஆற்றிய அற்புதங்கள் குறித்து விளக்கினாா்.
இதேபோல, பெரம்பலூா் - ஆத்தூா் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயம், பெரம்பலூா் வெங்கடேசபுரத்தில் உள்ள டி.இ.எல்.சி. தேவாலயத்திலும் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன. குரும்பலூா்பாளையத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சூசையப்பா் தேவாலயத்தில், கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு நள்ளிரவு முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதேபோல, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம், கவுல்பாளையம், எசனை, தொண்டமாந்துறை, பாத்திமாபுரம், நூத்தப்பூா், திருவாலந்துறை, வடக்கலூா், எறையூா் சா்க்கரை ஆலை, திருமாந்துறை, செட்டிக்குளம், பாடாலூா் ஆகிய பகுதிகளில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு பிராா்த்தனைகள், சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.