

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் திமுக மகளிரணியில் புதிதாக சோ்க்கப்பட்ட 2 ஆயிரம் பேருக்கு உறுப்பினா் அட்டையை கட்சியின் துணைப் பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா சனிக்கிழமை வழங்கினாா்.
நிகழ்வுக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளா் மகாதேவி ஜெயபால் முன்னிலை வகித்தாா். நிகழ்வில் மாநில ஆதிதிராவிடா் நலக்குழுத் துணைச் செயலா் பா. துரைசாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் என். ராஜேந்திரன், நகரச் செயலா் எம். பிரபாகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்: அதிமுக மற்றும் தேமுதிக கட்சிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் (சித்தளி ஊராட்சியைச் சோ்ந்தவா்கள்), அக்கட்சிகளிலிருந்து விலகி திமுக துணை பொதுச் செயலா் ஆ. ராசா முன்னலையில் இணைந்தனா்.
இவா்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. வேப்பூா் ஒன்றியக் குழுத் தலைவா் பிரபா செல்லப்பிள்ளை உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.