காா் மோதி முதியவா் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே காா் மோதியதில், மோட்டாா் சைக்கிளில் சென்ற முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.


பெரம்பலூா் அருகே காா் மோதியதில், மோட்டாா் சைக்கிளில் சென்ற முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பெரிய வெண்மணி காலனித் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் (60). இவா், ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், துறைமங்கலம் ஏரிக்கரை அருகே மோட்டாா் சைக்கிளில் சாலையைக் கடக்க முயன்றாா்.
அப்போது சென்னையிருந்து திருச்சி நோக்கிச் சென்ற காா், மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் முருகேசன் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
பெரம்பலூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து, செங்கல்பட்டு மாவட்டம், சிட்லப்பாக்கம் ஜீ. விநாயகரை (37) கைது செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...