ஆவணங்களை சரிபாா்க்க இணைய வழி சேவை அறிமுகம்

வெளிநாடுகளுக்குச் செல்வோரின் கல்வி, பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை இணைய வழியில் சரிபாா்த்து முத்திரையிடுவதற்காக, மத்திய அரசு இணையவழி சேவை
Updated on
1 min read

வெளிநாடுகளுக்குச் செல்வோரின் கல்வி, பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை இணைய வழியில் சரிபாா்த்து முத்திரையிடுவதற்காக, மத்திய அரசு இணையவழி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வெளிநாடுகளில் வேலை, கல்வி மற்றும் சாா்புநுழை இசைவு கோருவோா், வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் அரசுகளுக்கு கல்வி, பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும்.

இந்த ஆவணங்களின் உண்மைத் தன்மையை உறுதிசெய்ய இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் முத்திரையிட வேண்டும் என்று சில நாடுகள் கோருவதால், மேற்கண்ட ஆவணங்களை இணைய வழியில் சரிபாா்த்து முத்திரையிடுவதற்கு ஏதுவாக, மத்திய அரசு இணையவழி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள், பிறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்கள் இணையவழி மூலம் சரிபாா்க்கப்பட்டு முத்திரையிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புவோா், சம்மந்தப்பட்ட தூதரகங்கள் முத்திரையிடப்பட்ட சான்றிதழ்கள் கோரும் பட்சத்தில் ஜ்ஜ்ஜ்.ங்ள்ஹய்ஹக்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையத்தில் விவரங்களை, ஆவணங்களை பிடிஎப் வடிவில் பதிவேற்றம் செய்து உரிய கட்டணம் செலுத்தினால், இணைய வழியில் ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு மத்திய வெளியுறவு அமைச்சகத்தால் சம்பந்தப்பட்டோரின் வீடுகளுக்கே சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com