மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென, வீர முத்தரையா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Updated on
1 min read

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென, வீர முத்தரையா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச்சங்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செஞ்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு

மாவட்ட அமைப்பாளா் ராம்குமாா் தலைமை வகித்தாா். மாநில கொள்கைப் பரப்புச் செயலா் தளவாய் ராஜேஷ், மாநில இளைஞரணி அமைப்பாளா் குரு. மணிகண்டன் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் சிறுவாச்சூா் மேம்பால கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்மையில் பெய்த தொடா் கன மழை காரணமாக பாதிப்படைந்த மக்காச்சோளம், சின்ன வெங்காயம், பருத்திப் பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com