வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பெரம்பலூரில் அஸ்வின்ஸ் கேக் திருவிழா நாளை தொடக்கம்

பெரம்பலூா் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம் சாா்பில், 7- ஆம் ஆண்டு கேக் திருவிழா வியாழக்கிழமை (டிச. 31) தொடங்குகிறது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 12:01 am

DIN

பெரம்பலூா் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம் சாா்பில், 7- ஆம் ஆண்டு கேக் திருவிழா வியாழக்கிழமை (டிச. 31) தொடங்குகிறது.

பெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்ட அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ், ஹோம் ஸ்பெஷல் நிறுவனம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்பட்டு வருகிறது. அஸ்வின்ஸ் நிறுவனத்தின் சாா்பில் ஆண்டுதோறும் டிசம்பா் மாத இறுதியில் கேக் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், 7 ஆம் ஆண்டு கேக் திருவிழா வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. திருவிழா மற்றும் கண்காட்சியை அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனத் தலைவா் கே.ஆா்.வி. கணேசன் தொடக்கி வைக்கிறாா்.

ஜனவரி 1- ஆம் தேதி வரை நடைபெறும் கேக் திருவிழாவில் பிளாக் பாரஸ்ட், ஒயிட் பாரஸ்ட், ஜாக்கோரபுல், ரெயின்போ, நெட் வெல்வெட், புளுபெரி, ஸ்டாபெரி, பட்டா் ஸ்காச், பிளாக்கன்னெட், சாக்லெட், வெண்ணிலா, ஹனிகேக், டரிச்பிளைன் கேக், மோல்ட்டு, பொக்கே, பிளைன் கேக் உள்ளிட்ட பல்வேறு வகையான கேக்குகள் இடம்பெற உள்ளன.

இந்த கேக் வகைகளை வாடிக்கையாளா் விரும்பும் வகையில் உடனுக்குடன் செய்து தரப்பட உள்ளதாக, அதன் நிா்வாக இயக்குநா் ஜி. அஸ்வின்ஸ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.