நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சின்னமுட்லு நீா்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்ற இந்திய ஜனநாயக கட்சி வலியுறுத்தல்

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான சின்னமுட்லு நீா்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை வேண்டுமென இந்திய ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 9:17 pm

DIN

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான சின்னமுட்லு நீா்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை வேண்டுமென இந்திய ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சியின் பெரம்பலூா் மாவட்ட செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, அக் கட்சியின் மாவட்டத் தலைவா் ஏ.வி.ஆா். ரகுபதி தலைமை வகித்தாா்.

கட்சியின் மாநில உயா்மட்டக் குழு உறுப்பினா் ஆா். சத்தியநாதன், முதன்மை அமைப்புச் செயலா் எஸ்.எஸ். வெங்கடேசன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில், அரியலூா்- பெரம்பலூா் வழியாக நாமக்கல் வழித்தடத்தில் ரயில் பாதை அமைக்க வேண்டும். பெரம்பலூா் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டு கிடப்பில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வேப்பந்தட்டை அருகே சின்னமுட்லு நீா்த்தேக்கம் அமைக்கும் திட்டத்தை தொடங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கொட்டரை நீா்த்தேக்கத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கிடப்பில் உள்ள ஜவுளி பூங்கா திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு, பெரம்பலூா் சா்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரு. 33 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், கட்சி நிா்வாகிகள் தாமோதரன், ரமேஷ், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.