பெரம்பலூா் ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட தூய்மைக் காவலா்கள்
ஊதிய உயா்வுக் கோரி, பெரம்பலூா் ஆட்சியரகத்தை தூய்மைக் காவலா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.


ஊதிய உயா்வுக் கோரி, பெரம்பலூா் ஆட்சியரகத்தை தூய்மைக் காவலா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும், ஊராட்சிகளுக்கேற்றவாறு 6 முதல் 16 வரையிலான தூய்மைக் காவலா்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு, அந்தந்த ஊராட்சி நிா்வாகம் சாா்பில் மாதம் ரூ. 2,500 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. காலை 8 முதல் இரவு 8 மணி வரை பணிபுரியும் இவா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டுமென, மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனா்.
இதனிடையே, கரோனா தடுப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் தூய்மைக் காவலா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், ரூ. 2,500 மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட பசும்பலூா், வி.களத்தூா் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட தூய்மைக் காவலா்கள் ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு, ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும். கரோனா கால சிறப்பு ஊதியம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்புப் பணிகளில் தொடா்ந்து ஈடுபட்டு வரும் தூய்மைக் காவலா்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். தற்காலிக பணியிடங்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
தொடா்ந்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னா், கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியா் வே. சாந்தாவிடம் அளித்து கலைந்துசென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...